முகப்பு / கருவளம் & IVF / IUI
மக்லோட் IVF & கருவளச் சிகிச்சை நிலையம்பெற்றோராகும் கனவை நனவாக்குகிறோம். நியாயமான கட்டணத்தில்.
எமது IVF சிகிச்சை மூலம் 2,000 இற்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்துள்ளனர். இலங்கையிலிருந்தும் உலகெங்கிலுமிருந்தும் தம்பதியினர் எமது நிபுணர்கள், கருவியலாளர்கள் மற்றும் நவீன ஆய்வுகூடத்தை நம்புகின்றனர்.

- 2,000+IVF மூலம் பிறந்த குழந்தைகள்
- 2,800IVF சுழற்சிகள் (சுமார், 2018–2025)
- 1,600+சிகிச்சை பெற்றவர்கள்
- 56.9%மருத்துவக் கர்ப்ப வீதம்*
- 2,000+உறைய வைக்கப்பட்ட கருமுளைகள்
*வைத்தியசாலை அறிவித்த தரவுகள், 2018–2025.
சரியான சிகிச்சை, எளிமையான விளக்கம்.

IUI
தயார்படுத்தப்பட்ட விந்தணுக்கள் முட்டை வெளியாகும் நேரத்தில் கருப்பையினுள் செலுத்தப்படும். எளிமையானது, விரைவானது, பெரும்பாலும் முதல் படி.

IVF
முட்டைகள் எமது ஆய்வுகூடத்தில் கருக்கட்டப்பட்டு, ஆரோக்கியமான கருமுளை கருப்பையினுள் வைக்கப்படும்.

ICSI
ஒவ்வொரு முட்டையினுள்ளும் ஒரு விந்தணு செலுத்தப்படும். விந்தணுக்களின் எண்ணிக்கை அல்லது அசைவு குறைவாக இருக்கும்போது உதவும்.

லேசர் உதவியுடனான hatching
கருமுளையின் வெளிப்படலத்தில் லேசர் மூலம் இடப்படும் சிறிய திறப்பு, அது கருப்பையில் பதிய உதவக்கூடும்.

கருமுளை உறைய வைத்தல்
தரமான கருமுளைகள் எதிர்காலப் பயன்பாட்டிற்காகப் பாதுகாப்பாக உறைய வைக்கப்படும். மீண்டும் ஊக்க மருந்து தேவையில்லை.

ஆண் கருவளச் சிகிச்சை
விந்துப் பரிசோதனை, மற்றும் விந்தில் விந்தணு இல்லாதபோது சத்திர சிகிச்சை மூலம் விந்தணு பெறுதல்.


நவீன கருவியல் ஆய்வுகூடம், இங்கே இணுவிலில்.
எமது IVF ஆய்வுகூடத்தில் கருமுளை இன்குபேட்டர்கள், நுண் சிகிச்சை நுணுக்குக்காட்டிகள் மற்றும் தூய காற்றுப் பணி மேடைகள் உள்ளன. அர்ப்பணிப்புள்ள கருவியல் குழு இதனை இயக்குகிறது.
எமது முடிவுகள் எவ்வாறு ஒப்பிடப்படுகின்றன
இது ஒரு குறிகாட்டி மட்டுமே. மக்லோட்டின் எண்ணிக்கை மருத்துவக் கர்ப்ப வீதம். ஐக்கிய இராச்சிய எண்ணிக்கை, மாற்றப்பட்ட ஒவ்வொரு கருமுளைக்குமான கர்ப்ப வீதம் (புதிய கருமுளை, சொந்த முட்டை). மூலம்: HFEA, Fertility Treatment 2023.
படிப்படியாக என்ன நடக்கும்.
- முதல் சந்திப்புஇருவரும் சேர்ந்து நிபுணரைச் சந்தியுங்கள். முந்தைய அறிக்கைகளைக் கொண்டு வாருங்கள்.
- இருவருக்குமான பரிசோதனைகள்ஹோர்மோன் பரிசோதனைகள், ஸ்கேன் மற்றும் விந்துப் பரிசோதனை.
- உங்கள் சிகிச்சைத் திட்டம்உங்களுக்கென்று தயாரிக்கப்பட்ட திட்டம். ஆரம்பிக்கும் முன் கட்டணம் விளக்கப்படும்.
- சிகிச்சைகண்காணிப்புடனான மருந்துகள், முட்டை சேகரிப்பு, ஆய்வுகூடத்தில் கருக்கட்டல்.
- கருமுளை மாற்றம்மென்மையான, குறுகிய நேரச் செயன்முறை.
- கர்ப்பப் பரிசோதனைமுடிவு எதுவானாலும் ஆலோசனையும் ஆதரவும்.
உலகத்தரம் வாய்ந்த IVF / IUI சிகிச்சை, குறைந்த கட்டணத்தில்
குழந்தைக்காக முயற்சிக்கும் தம்பதியினருக்குப் பணம் தடையாக இருக்கக்கூடாது என நாம் நம்புகிறோம். பாதுகாப்பிலும் ஆய்வுகூடத் தரத்திலும் சமரசமின்றி, நவீன கருவளச் சிகிச்சையை நியாயமான கட்டணத்தில் வழங்குவதே எமது இலக்கு.